Home | About Me | E-Mail |



ட்ரிங் ட்ரிங்

என்னடா

இன்னிக்கு ஆஃபிஸ்ல இருந்து சீக்கிரம் வந்திடுப்பா

அடிப்பாவி! இப்பதான் வீட்டுல இருந்து கிளம்பி ஆஃபீஸ்க்கே வந்து சேர்றேன்.அதுக்குள்ள ஃபோனை போட்டு இன்னிக்கு சீக்கிரம் வரச் சொல்ற. இன்னிக்குன்னு பார்த்து இங்கயும் வேலை அதிகமா இருக்குமா.

போடா உனக்கென்ன! எனக்கென்னமோ இன்னிக்கு உன்கிட்ட நிறைய பேசணும்னு தோணுது. யேய் ப்ளீஸ்பா, இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வாயேன்.

ம்ம்ம்... சரி இன்னிக்கு நான் சீக்கிரம் வந்துட்டா என்ன தருவ.

என்ன வேணும்.

நீயே சொல்லு.

ஹ்ம்ம். நேத்து ஆசையா கேட்டியே. நான் கூட வெட்கப்பட்டுக்கிட்டு மாட்டேன்னுட்டனே. அதைத் தரேன்.

என்ன கேட்டேன். மறந்துட்டனே.

திருடா தெரியாத மாதிரி நடிக்கறியா. அதான் முத்து படத்தில ரஜினி கேட்கற மாதிரி கேட்ட இல்லை. தரேன். போதுமா?

நிஜமா?

நிஜம்ம்ம்ம்ம்ம்மாதான்

அப்புறம் பேச்சு மாற மாட்டியே?

மாட்டேன்.

சத்தியமா?

சத்... யேய், நான் சொன்னா நம்ப மாட்டியா நீ.

சரி சரி நம்பறேன்.அதுக்கு முன்னாடி நீ ஃபோனை வெச்சுட்டு வந்து கதவைத் திற.

கதவை.....What? என்ன சொன்ன.

வந்து கதவைத் திற. தெரியும்.
...
...
...
...
...
...
...
...
...
...

ப்பச்சக்..

11 Comments:

  1. said...
    தல, ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்காப்புல இருக்கே, சொந்த கதையோ? ;)
    said...
    ஆகா என்ன மாதிரி சின்ன பசங்கள இந்த மாதிரி கதை எழுதி. . . .. .
    என்னமோ போங்க

    ஆனா நல்லா இருக்கு . . . . . . . . .
    said...
    ஒற்றை முத்தத்தை வச்சி கதைங்கிறீங்க, கவிதைங்கிறீங்க.. என்னய்யா நடக்குது?! ;)
    said...
    அனுபவம் பேசுதோ?..

    //அடிப்பாவி! இப்பதான் வீட்டுல இருந்து கிளம்பி ஆஃபீஸ்க்கே வந்து சேர்றேன்.

    அதுக்கு முன்னாடி நீ ஃபோனை வெச்சுட்டு வந்து கதவைத் திற.//

    எப்படி நந்தா.

    இருந்தாலும் நீங்க ரொம்ப பாஸ்ட்டுதான் போங்க.....
    said...
    அந்த படம் உங்கள் பதிவிற்கு கச்சிதமா பொருந்தியிருக்கு.
    said...
    லக்ஷ்மி மாட்டி விடறீங்க பார்த்தீங்களா. சொந்த கதை எல்லாம் ஒண்ணுமில்லைங்க. எல்லாம் ரூம் போட்டு யோசிச்சதுதான்.

    நன்றி வெங்கட்ராமன், சிவகுமார்.

    பொன்ஸ் எத்தனை நாளைக்குதான் வெட்டு குத்து கொலை ரத்தம்னு ஒரு வீரனாவே வழ்ந்திட்டிருக்கறது, அதான் ஒரு சேஞ்சுக்கு இப்படி. (எனக்கே இந்த பதில் ரொம்ப ஓவரா தெரியுதே)

    ஜே.கே உங்களை தனியா கவனிச்சுக்கறேன்.
    said...
    எட்டு ஆட்டத்துக்கு உங்களை இழுத்து விட்டிருக்கேன். என்னைய மனசுக்குள்ள திட்டிகிட்டேவாச்சும் பதிவை போட்டுடுங்க சீக்கிரமா.
    said...
    செல்லம்....சூப்பர் கதைப்பா....அனுபவமா? இல்ல கற்பனையா?
    Anonymous said...
    கதையா? நம்பமுடியவில்லை. நிச்சயம் ஒவ்வொருவரும் இதை கடந்துதான் வந்திருக்கவேண்டும் இல்லையா?
    said...
    தமிழ்மண கமல்ஹாசன் விவகாரத்தில் பொற்கொடிக்கு என் ஆதரவு உண்டு!

    "சந்தைக்கடைத் தெருவில் சத்தம் என்ன புதுசா?
    நந்தாவோட ப்ளாக்கில் முத்தம் என்ன புதுசா? - அட
    முத்தம் என்றால் உதடுகள் குவியும். -ஆனால்
    உள்ளே உள்ள இதயமும் விரியும்."
    (நந்தாபாய் MBBS)
    MBBS- Muththa Blog; Blog of S....)

    சாரிப்பா என்ன போடுறதுன்னு தெரியல
    said...
    Romba nalla iruku... rasikka vaithathu

Post a Comment