Home | About Me | E-Mail |

உனக்கென்ன?
உன் பாடு பரவாயில்லை.

என்னைப் போல
மொட்டை மாடி இரவின்
நிலா வெளிச்சத்தில்,
வார்த்தைகளை தேடிப்பிடித்து,
விரயம் செய்து,
நடு நடுவில்
கண்ணே , மணியே சேர்த்து,
கவிதை எனும் பெயரில்
குப்பையாய் ஒன்றை
கொடுக்க வேண்டிய தேவை
எதுவும் இருப்பதில்லை.

நான் தரும் குப்பையை
வாசித்து விட்டு,
மெல்ல முகம் சுளித்து,
கண்களை சுருக்கி,
செல்லமாய் சிணுங்கி,
"ச்சீ போடா"
என நீ சொல்லும்
ஒற்றை சொல்லே போதும்.

அதற்கே நான் பாதி செத்து விடுகிறேன்.

7 Comments:

  1. said...
    இதோ பாருங்கப்பா.. இன்னொருத்தர்! நவீன் பிரகாஷ், அருட்பெருங்கோ மாதிரி :-) தமிழ்மணத்தில் மறுமொழி நிலவரம் தெரியச் செய்யுங்கள்... வாழ்த்துக்கள்.
    said...
    அதுக்கு முதல்ல மறுமொழி மட்டுறுத்தல் செய்யணும் :-)
    said...
    அடடா...

    காதலிப்பதில் ஒரு அங்கம் இதுதானே..

    கடுகையும் கயிலாய மலையில் ஏற்றித்தானே பார்ப்போம்?

    தொடர்ந்து எழுதுங்கள்..
    வாழ்த்துக்கள்..
    தோழமையுடன்,
    இராகவன் என்ற சரவணன் மு.
    said...
    நல்லா இருகுங்க வாழ்த்துக்கள்
    said...
    நந்தா முதன் முறை இங்கு வருகிறேன் !!
    அழகு! அழகு!
    வேறென்ன சொல்ல !?

    மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள் !! :))
    said...
    :)
    said...
    :)

Post a Comment