Home | About Me | E-Mail |

விரல் விட்டு எண்ணிடலாம்
கடந்த ஐந்து வருடங்களில்
நான் சென்று வந்த கோயில்களின்
மொத்த எண்ணக்கையை.

அம்மாவின் வேண்டுதலோ,
தங்கையின் தொந்தரவோ,
அப்பாவின் கோபப்பார்வையோ,
அதன் பின் ஒளிந்து நிற்கும்.

ஆனால்,
உன்னைப் பார்த்ததிலிருந்து
என்னுடைய எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும்
கோயில்களாலேயே நிரப்பப் படுகின்றன.

"பெரிய நாத்திகன் மாதிரி பேசுன!
இப்போ மட்டும் என்ன வந்தது?"
என் நண்பர்கள் கேட்கிறார்கள்.
என்ன சொல்வது அவர்களிடம்?

என்னை,
ஒரு குழந்தை போல் பாவித்து,
ஒவ்வொரு பிரகாரங்களிலும்
நீ வைத்து விடும்
திருநீறு, குங்குமத்தில்
நான் உயிர்த்தெழுவதை,
எவர் புரிந்து கொள்ளக் கூடும்?

அடப் போங்கடா.
நாத்திகமாவது! ஆத்திகமாவது!

11 Comments:

  1. said...
    சூப்பருங்கண்ணா...
    said...
    நந்தா,

    ஒவ்வொரு கவிதையிலையும் காதல அள்ளித் தெளிக்கிறீங்க போங்க…

    காதலுக்கு முன்னாடி நாத்திகமாவது, ஆத்திகமாவது…. நச்சுனு சொன்னீங்க!!!
    said...
    அப்பூ சூப்பர் அலும்புக் கவிதை இது.. :-)
    said...
    நந்தா!

    கலக்குறீங்க போங்க!
    காதல் எழுத்துல தெரியுது.
    said...
    Excellent!!
    said...
    //ஒவ்வொரு கவிதையிலையும் காதல அள்ளித் தெளிக்கிறீங்க போங்க…//

    வாங்க அருட்பெருங்கோ. நீங்க எடுத்துக்கிட்டது போக மீதியைதான் ஏதோ கொஞ்சமா தெளிக்கிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவ், கார்மேகராஜா, சிவபாலன்.
    Anonymous said...
    இதற்குதான கோயிலுக்கு போனீர்கள்?haha.நல்ல கவிதை நந்தா...
    said...
    நல்லா எழுதறீங்க.

    \\ வாங்க அருட்பெருங்கோநீங்க எடுத்துக்கிட்டது போக மீதியைதான் ஏதோ கொஞ்சமா தெளிக்கிறேன்.//

    கொஞ்சமா வா..எல்லாம் அடக்கமாத்தான்
    பேசறீங்க.
    said...
    இந்தக் கவிதையும் அருமை
    said...
    enakintha kavithaya vasichathum " Muruga" padathila hero palluvilakamal koyiluku ponathuthan gpagam varuthu :-)))
    said...
    :)

Post a Comment