நான் பாட்டுக்கு செவ்வனேன்னு நாலு, அஞ்சு கவிதயை எழுதிக்கிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தேன். நீ எழுதறது மட்டும் தான் லூசுத்தனமா இருக்குமா இல்லை ஆளே லூஸான்னு தெரிஞ்சுக்கணும்னு சொல்லி நம்ம தேவ் போற போக்குல கோர்த்து விட்டுட்டு போய்ட்டாரு. வேற வழியே இல்லாம, நானும் சரி நாம செய்யற அஞ்சு கிறுக்குத்தனம் என்னன்னு ஒக்காந்து யோசிச்சா உள்ள இருந்து மனசாட்சி கத்துது. அடேய் வெறும் அஞ்சு கிறுக்குத்தனமாடா நீ செய்யற? ஐநூறு கிறுக்குத்தனம் செஞ்சுக்கிட்டு இருக்கறடான்னனு சொல்லி.ஆனா அதுக்கு நான் சந்தோஷப்பட்டேன். பரவாயில்லை, நாம செய்யற எல்லாமே அப்படித்தான் இருக்குதுன்னு சொல்லாம போச்சேன்னு உள்ள ஒரு சின்ன ஆறுதல்.
பாருங்க எப்படி எப்படி எல்லாம் நினைச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதா இருக்குன்னு. இதுல கொடுமை என்னன்னா நான் எழுதற ப்ளாகே "நந்தாவின் கிறுக்கல்கள்" னுதான் இருக்கு. சரி ஐநூறையும் எழுதறதுக்கு ஒரு பதிவு பத்தாதுன்னு வெறும் அஞ்சு மட்டும் எழுதி இருக்கேன். பின்ன படிக்கறவங்க நிலைமையையும் கொஞ்சம் யோசிக்கணுமில்லையா?
1.புத்தகங்கள்: இது அனேகமா தமிழ் மணத்தில இருக்கற நிறைய பேருக்கு இருக்கற கிறுக்குதான். என்னதான் சொல்லுங்க. ஏதாவது சாப்டுக்கிட்டே புத்தகம் படிக்கிறதில இருக்கற சுகமே தனிங்க.நமக்கு பிடிச்ச மாதிரி ஒரு புத்தகம் அமைஞ்சிடுச்சின்னா 'ரவுண்ட்' கட்டி உக்காந்து படிப்பேன். 2 மாசம் முன்னாடி நடந்த புத்தகக் கண்காட்சியில 3000 ரூபாய்க்கு மேல புத்தகம் வாங்கினேன்னா பாத்துக்கோங்களேன். என்ன என்ன புத்தகம் வாங்கினேன்னு நானும் ஒரு பதிவு போடலாமான்னு பார்த்தேன். ஆனா அதுக்குள்ள ரொம்ப லேட் ஆய்ட்டதால பேசாம விட்டுட்டேன். அடுத்த புக் ஃபேர்ல என்ன என்ன வாங்கணும்னு இப்ப இருந்தே லிஸ்ட் போட்டுட்டு இருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.
2.எனக்கு நானே பேசிக்கறது: நான் ஒரு விஷயத்தை ரொம்ப சிறப்பா செஞ்சுட்டா எனக்கு நானே 'கலக்கிட்டடா நந்தா' 'பின்னிட்டடா மாமூ' இந்த மாதிரி ஏதாவ்து சொல்லி என்ன நானே தட்டிக் கொடுத்துக்குவேன். இதே எதையாவது தப்பா செஞ்சு சொதப்பிட்டனா 'டேய் லூசு! இது கூட தெரியாதா உனக்கு' 'கிறுக்கன்டா நீ' இப்படி ஏதாவ்து சொல்லி என்னை நானே திட்டிக்குவேன்.இவ்வளவு ஏன் வண்டி ஓட்டறப்போ சிக்னல் மாறுகிற மாதிரி இருந்தால் 'டேய் கண்ணு போய்டுரா! போய்டுரா' ன்னு சொல்லிக்குவேன். இது பெரும்பாலும் நான் தனியா இருக்கறப்போ மட்டும் தான். அதனால் இப்படி ஒரு பழக்கம் என்கிட்ட இருக்கறது என் நண்பர்களுக்கே தெரியுமா தெரியாதான்னு தெரியலை.
3. சினிமா: சும்மா ரவுண்டு கட்டி படம் பார்க்கிற கேசு. கொஞ்சம் விட்டுருந்தா அசிஸ்டண்ட் டைரக்டர் சான்ஸ்க்கு கூட அலைஞ்சிருப்போம். ஆனா தமிழ் சினிமா கொடுத்து வெச்சது கம்மிதான் போல. ஏனோ அந்த பக்கம் போகாமயே இருந்துட்டேன். நம்மளை சுத்தி இருக்கறதுங்களும் படம் பார்க்கிற கேசுங்களா இருக்கறதால பெரும்பாலான படத்தை பார்த்திடுவேன்.சில படங்களை கணக்கு வழக்கு இல்லாம பாத்திருக்கேன். ரீசண்டா நம்ம கேப்டன் நடிச்ச சபரி படத்தை போய் பார்த்து ரத்தக்களரியா வந்ததை எல்லாம் நான் சொல்ல மாட்டேன். இதுல தமிழ் இங்கிலீஷ்னு பேதம் இல்லாம DVD கலெக்ஷன் எல்லாம் வெச்சிருந்தேன். யார் யாரோ வந்து எடுத்திட்டுப் போனாங்க. மாப்ளை கொடுத்திருடான்னு கேட்டா, யாரு நீ? ன்னு திருப்பி கேக்கிறாங்க. பாசக்கார பயலுக......
4.வாதம் செய்தல்: ஒரு விஷயம் தப்பு. செய்யாதேன்னு சொன்னா அப்படியே ஒத்துக்க மாட்டேன். எதனால தப்பு ன்னு புரியவைக்க சொல்லுவேன். இல்லைன்னா இது சரிதான்னு அவங்க கிட்ட argument பண்ண ஆரம்பிச்சுடுவேன். அதுக்காக மத்தவங்க சொல்றதை ஏத்துக்க மாட்டேன்னு அர்த்தம் கிடையாது. அதே சமயம் சரியான காரணங்கள் இல்லைன்னா கடைசி வரைக்கு அதை ஒத்துக் கொள்ளவும் மாட்டேன்.
5.லேட்டா தூங்க போறது: பேச்ச்சிலர் லைஃபோட சௌகர்யங்கள்ல இதுவும் ஒண்ணுன்னு சொல்லலாம். நைட் படுக்க போறது டெய்லி லேட் ஆகும். சர்வ சாதாரணமா 2 மணி ஆகும். வீக் என்ட்னா 4 மணி 5 மணி கூட ஆகும். வெட்டி அரட்டை, Computer Games, படம் பார்க்கறது, புக்ஸ் இப்படி ஏதாவ்து பண்ணிக்கிட்டு இருப்பேன். வீட்ல எனக்கு 'ராக்கோழி'ன்னுதான் பேரே. நான் தனியா பார்க்கணும்னு நினைக்கிற படங்களை எல்லாம் இப்படி நைட் உக்காந்து தான் பார்ப்பேன். Cricket 2007, Lord of Rings, StrongHold, AOE இந்த மாதிரி பல கேம்ஸை நைட் விடிய விடிய விளையாடிய காலமும் உண்டு. பின்ன இதெல்லாம் இப்பயே பண்ணிக்கிட்டாதாங்க உண்டு.
எல்லாம் படிச்சதுக்கப்புறம். த்தூ! இதெல்லாம் ஒரு பொழப்பா? ன்னு உங்கள்ல பல பேரு கேக்க நினைக்கிறது எனக்கு புரியுது. என்னங்க பண்றது பொது வாழ்க்கைன்னு வந்ததுக்கப்புறம் இதெல்லாம் தாங்கித்தான ஆகணும். சரி நாம லூசு ஆனது போதும். நம்ம பங்குக்கு நாம யாரையாவது மாட்டி விடணுமே. உண்மையில சொல்லப் போனா இப்படி அஞ்சு பேத்தை மாட்டி விடணும்னு சொல்லலைன்னா நான் இந்த பதிவை எல்லாம் எழுதவே மாட்டேன். அது என்னவோ தெரியலை நம்மளால ஒரு நாலு பேரு கஷ்டப் பட்டாங்கன்னா அடி வயித்துல இருந்து ஒரு சந்தோஷம் வரும் பாருங்க. அதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்.
1.கார்மேகராஜா - http://karmegarajas.blogspot.com
2.சிவபாலன் - http://sivabalanblog.blogspot.com
3.பிரேம் குமார் - http://premkumarpec.blogspot.com
4.சுரேஷ் - http://nsureshchennai.blogspot.com
5.இராகவன் - http://kavithaikealungal.blogspot.com
அப்பாடா! நம்ம பங்குக்கு அஞ்சு பேத்தை கோத்து விட்டாச்ச்சு. யாராவது ஏற்கனவே இந்த ஆட்டத்தை ஆடி முடிச்சிருந்தீங்கன்னா விட்டுடுங்க. மத்தவங்க வந்து இந்த ஜோதியில கலந்துக்கோங்க.
:-0)
இது நம்ம எல்லொருக்கும்ம்பொருந்தும்னு நினைக்கிறேன்.
நாம தனியா தான் உட்கார்ந்து சாப்பிடணும்.
இல்லைன்னா மத்தவங்க பிபி எகிறும்.!
மிக்க மகிழ்ச்சி! நான் இன்று பதிவிடுகிறேன்.
உங்க கிறுக்குதனங்கள் ஜாலியானது தான்.. படிக்க சுவாரசியமாக இருந்தது
பாருங்க..
அப்போ பகுத்தறிவுவாதிகள் உணர்வுபூர்வமாக விஷயத்தை அணுக மாட்டார்களா?
இல்ல
மனிதம் என்னும் கண்ணாடியத்தான் கழட்டி வெச்சிடுவாங்களா?
இதுதான் உங்க வியர்டு குணம்னு நினைக்கிறேன். :)
வாருங்கள் தம்பி. நல்லா தான் கேக்கறீங்க கேள்வியை. வியர்டு குணம் எல்லாம் இல்லீங்க. இது எனது வாக்கிய அமைப்பிலுள்ள கோளாறு அவ்வளவுதான். இதோ மாற்றி விட்டேன். சுட்டி காட்டியமைக்கு நன்றி.
"வாழ்வின் பல விஷயங்களை உணர்வுப்பூர்வமாகவும், மனிதம் எனும் கண்ணாடி வழியாகவும் பார்க்கும் ஒரு சாதாரண பகுத்தறிவு வாதி."
நான் ஏதோ சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.
சரி பரவால்ல இதுவும் நல்லாதாங்க இருக்கு.
கவனத்தில் எடுத்துகிட்டதுக்காக மிக்க நன்றிங்க நந்தா!
உங்களை மாதிரியே பலர் இருக்காங்க நந்தா.
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்..
நல்ல வியர்டான ஆளு தான் நீங்க.. கொஞ்சம் ஒத்துப்போகுதுங்க நம்மளோட வியர்டு குணாதிசயங்களோட..
என்னங்க நீங்க நமக்கும் வீட்டுப்பாடம் குடுத்துட்டீங்க... ஒருவழியா முடிச்சுட்டோம்ல.. அப்பால தான் உங்ககிட்ட வர்றேன்...
முடிஞ்சா ஒரு விசிட் அடிங்க... http://blogsofraghs.blogspot.com/2007/04/naanum-oru-thinusu-thaanga.html
நான் கவிதைகேளுங்கள் வலைப்பூவில எழுதலங்க.. அதுக்கான காரணத்தையும் பதிவுல சொல்லியிருக்கேன்.. உங்களுக்குக் கோபம் இருக்காதுன்னு நெனக்கிறேன் ;-)
நன்றி!
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.