"இயேசுவைக் கும்பிடாத எத்தனையோ ஊருங்க இருக்கு.
இந்து மதத்தைப் பத்தி தெரியாத எத்தனையோ நாடுங்க இருக்கு.
அல்லாவைக் கும்பிடாத எத்தனையோ ஜனங்க இருக்கிறாங்க.
ஏன்? கடவுளே இல்லைன்னு சொல்ற கூட்டம் கூட இருக்கு.
ஆனால் காதல் இல்லாத இடமே இல்லை.
காக்கா குருவிக்கிட்ட கூட காதல் இருக்கு.ஆனா மதம்ங்கிறது மனுஷன்கிட்ட மட்டும்தான் இருக்கு."
நல்லாதானடா இருந்த. திடீர்னு என்னடா ஆச்சு உனக்கு? என்ன கண்றாவி இதுன்னு கேக்கறீங்களா. வேற ஒண்ணுமில்லை. நேத்து நைட் தெரியாத்தனமா பூவே உனக்காக படத்துல ஒரு சீன் பார்த்துட்டேன். அதுல வர்ற டயலாக்தான் இது. இதாவாது பரவாயில்லை. க்ளைமாக்ஸ்ல அண்ணன் பேசுவாருங்க பாரு டயலாக்.......
அஞ்சு: So, காதல்ல தோத்துட்டா, வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது அப்படித்தானே? (எவன் சொன்னது. அப்படி பார்த்தா ஊர்ல ஒரு பயலுக்குக் கண்ணாலம் ஆகாது.)
விஜய்: தோக்கிறதுக்கு இது ஒண்ணும் பரிட்சை இல்லைங்க. அது ஒரு ஃபீலிங். அந்த ஃபீலிங் ஒரு முறை வந்துட்டா, வாழ்நாள் முழுக்க மறையாது. (என்ன ஃபீஈஈஈஈஈலிங்... நீ முதல்ல எட்டாவது பரிட்சையை ஒழுங்கா எழுதி பாஸ் பண்ணியா? என்னமோ IAS, IPS பரிட்சை ரேஞ்சுக்கு பில்டப் உடற)
அஞ்சு: ஆனால் காதல்ல தோத்தவங்க எத்தனையோ பேரு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கறதில்லையா? (அவனுங்க எல்லாம் சந்தோஷமா இருக்கறதே காதல்ல தோத்ததாலதான். ஜெயிச்சிருந்தாங்கன்னா சேது விக்ரம் மாதிரி ஏர்வாடியிலதான் திரிஞ்சிருப்பானுங்க.)
விஜய்: இருக்காங்க. ஆனா, அவங்க சந்தோஷமாதான் இருக்காங்கன்னு, உங்களிற்குத் தெரியுமா? எங்க அவங்க நெஞ்சுல கையை வெச்சு சொல்லுங்க பார்க்கலாம். அவங்க மனசுல அந்த பழைய காதல் இல்லைன்னு. முடியாதுங்க. எத்தனை வருஷம் ஆனாலும்,எங்கோ ஒரு மூலைல, அவங்க நெஞ்சுல அந்த பழைய்ய காதல் இருந்துக்கிட்டுதான் இருக்கும். (அதுக்கு பேருதான் சனி மூலைங்கிறது. பின்ன மறக்க முடியுமா? எதிர்த்த வீட்டு ராதிகா கிட்ட செருப்படி வாங்கினது. பக்கத்து வீட்டு செல்விக்கிட்ட கெட்ட வார்த்தையிலேயே திட்டு வாங்கினதை எல்லாம் மறக்க முடியுமா?)
அஞ்சு: ஒரு செடியில ஒரு பூ உதிர்ந்துட்டா அந்த செடியில இன்னொரு பூ பூக்கறதில்லையா? அது மாதிரிதான இதுவும். (இப்ப நீ என்ன கேக்க வர்ற.
தெளிவா கேளு. சும்மா செடி, பூ, கத்திரிக்காய்ன்னுட்டு)
விஜய்: வாஸ்தவம்தாங்க. ஆனா விழுந்த பூவை எடுத்து மறுபடி அந்த செடியில உங்களால ஒட்ட வெக்க முடியுமா? முடியாதுங்க. சில பேருக்கு அது செடி மாதிரி. சில பேருக்கு அது பூ மாதிரி. (சுத்தம்... அதுக்கு அந்த புள்ளை கேட்டதே பரவாயில்லை. கொஞ்சமாவது புரிஞ்சுது. நீ நேராவா எதையும் பேச மாட்டியா)
அஞ்சு: இதுதான் உங்க முடிவா? (அடிப்பாவி....இவ்வளவு நேரமா இந்த கண்றாவியைத்தான சொல்லிட்டிருந்தேன்)
விஜய்: இல்லை. இதுதான் என் பதில். (டேய் ரெண்டுமே ஒண்ணுதாண்டா. என்னதாண்டா பிரச்சினை உங்களுக்கு)
ஹி ஹி. ரொம்ப நாளா மொக்கைப் பதிவு போடணும்னு ஒரு ஆசை அதான். ஹி ஹி ஹி.
டேய் அப்போ இதுக்கு முன்னாடி போட்டதெல்லாம் ரொம்ப நல்ல பதிவுன்னு நினைச்சுட்டிருக்கியா? எல்லாமே மொக்கைதாண்டான்னு யாரும் சொல்லக் கூடாது. அது எனக்கே தெரியும்...
Labels: மொக்கை
இப்படியே பல மொக்கைகள் எழுத வாழ்த்துக்கள். விக்ரமன் படம் அத்தனையும் பாத்தீங்கன்னா நூறு பதிவு போட ஐடியா கிடைக்கும். டாம் க்ரூச கூட டப்பா கேரக்டர்ல நடிக்க வைக்கிற திறமை அவர்கிட்ட இருக்கு.
//இப்படியே பல மொக்கைகள் எழுத வாழ்த்துக்கள்.// ஆஹா. ஒரு க்ரூப்பாத்தான்யா திரியறாங்க.
அப்படியே மீறி பண்ணிக்கறதா இருந்தாலும், முதல்ல இவனுங்க கடனை எல்லாம் அடைச்சிட்டு வா.அப்புறம் யோசிக்கறேன்.
டொண்டொடடொடடொட டொய்ங். டொண்டொடடொடடொட டொய்ங்.
உன்பேரை சொல்லும் ரோசாப்பூ.
டொண்டொடடொடடொட டொய்ங். டொண்டொடடொடடொட டொய்ங்.
சொல்லாமலே.......
யார் பார்த்தது........
நெஞ்சோடுதான்........
பூ பூத்தது........
அஞ்சு அரவிந் : விஜய் விஜய் எங்க திடீர்னு காணாம போயிட்டீங்க. நல்லா தானே டயலாக் அடிச்சிகிட்டு இருந்தீங்க.
சங்கீதா : அங்க பாரு பந்தி போட்டாச்சுன்னோன முதல் ஆளா போயி உட்கார்ந்திருக்கறத . . . . . .
இந்த பின்னூட்ட கொலவெறி படைங்க கலக்கியிருக்காங்களே :))
இதில் கிடேசன் பார்க் சிங்கங்கள் உள்ளதா
வெங்கட்ராமரே. இதுவும் நல்லாதான் இருக்கு. உங்களுக்குமா இந்த கொலை வெறி.
அதெப்படி உறுதியா தெரியும்?
எல்லாம் நம்ம ஆளுங்க கைவண்ணம்தான்.......
///
உங்க ஆளுங்களா?இருக்காதே...உங்களுக்குதான் கும்மி அடிச்ச அது எல்லாம் ஒரு பொழப்பான்னு கேட்ப்பீங்களே...
இந்த அனானி பின்னோட்டங்களுக்கு பின் மர்மம் இருக்கின்றது
நீங்க நந்தா தானே?இல்லை போலி நந்தாவா?
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்ன்னு சொல்லுவாங்க.ஒரு வேலை மொக்கை பதிவு போடுற எங்க கூட சேர்ந்து நீங்களும் 'மணம்' வீச ஆரம்பிச்சுடீங்களோ?
மேலாளர்,
பின்னூட்டக் கன்சல்டன்ஸி பி.லிட்,
சென்னை.
(An ISO Certified And Authorised AMK Service Provider)
எனக்கு ரொம்பப் பிடிச்ச படமய்யா!
இதை வெச்சே காமெடி பண்ணீட்டீங்களே!
:(
பண்ணலை!
ஒரு வயசுலயே இந்தப் படத்தைப் பார்த்தீங்களா?
அதுவும் வெறியோட பார்த்தீங்களா?
இந்தக் கதை ஏன் சிபிக்கு பிடிக்குதுன்னா..
வேணாம் அவரோட கதை ஒண்ணு இதுல இருக்கு!
அப்படியே நியூஸ் பேப்பர் காரன் வரானான்னு பாருங்க!
நந்தாவோட பதிவு படிக்குற அளவுக்கு ஜெனரல் நாலேஜ் இம்ப்ரூவ் ஆயிடுச்சா!
அனேகமா அவருதான் சேத்து வெச்ச தியாகியா இருப்பாருன்னு நினைக்கிறேன்.
//ஒரு வயசுலயே இந்தப் படத்தைப் பார்த்தீங்களா?
அதுவும் வெறியோட பார்த்தீங்களா? //
ஆமா நான் அஞ்சு அரவிந்தோட தீவிர ரசிகன். அதான் இந்த வெறி.
நந்தாவோட பதிவு படிக்குற அளவுக்கு ஜெனரல் நாலேஜ் இம்ப்ரூவ் ஆயிடுச்சா!//
என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே....
ச்சேச்சே!
பஸ்ஸில் வந்த ஃபிகரோட அப்பா
மேரின்னு முடியும்!
என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்!
தெரியலைப்பா....தெரியலை
கானா பாட்டு ஆராய்ச்சி பண்ணப் போனப்போ நம்ம வீட்டு நாய் குட்டி போட்டப்போ கூட என்ன பேரு வெக்கலாம்னு கேட்டு லெட்டர் போட்டேனே!
வெள்ளியங்கிரி அங்கிள் கூட வாந்தின்னு பேரு வைக்கலாம்னு சொன்னாரே!
இரு இரு போய் தாமஸ்கிட்டயும், மோஸஸ்கிட்டயும் சொல்றேன்!
அவ பேரு நிர்மலா மேரி இல்லை!
பிரியதர்ஷிணி!
பிரியதர்ஷிணி!//
அனானி, பரவாயில்லையே. படத்துல அந்த புள்ளை பேரு ப்ரியதர்ஷினின்னு கரெக்டா தெரிஞ்சு வெச்சிருக்க.
மொக்கை படத்தை விடாம உக்காந்து பாத்திருக்க போல
//
இது படமா! இல்லை படமான்னு கேக்குறேன்!
இது ஒரு காவியம்!
(மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவரணக் கிளி பறக்குது)
என் பேரு அனானி இல்லை!
ஜானகி!
ஏன்யா! என் புள்ளை பேரு எனக்குத் தெரியாதா?
பிரிண்ட் போட்டு வெச்சிக்கப் போறேன்!
பிரிண்ட் போட்டு வெச்சிக்கப் போறேன்! //
அய்யோ சிபி அவ்ளோவ் தீவிர ரசிகரா நீங்க இந்த படத்துக்கு. என்னமோ போங்க. ஆனா அந்த பாட்டு அருமையான பாட்டு.
படமும் நல்லாதான் இருக்கும். ஒரு சில டயலாக்ஸ் தான் இப்போ காமெடியா போயிடுச்சு.
யக்கா மேரிக்கா. எனக்கு மிச்சமா உக்காந்து பாத்திருப்பீங்க போல இருக்கு.
இவருக்கு பீடி குடுங்க!
"பாட்டும் நானெ பாவமும் நானே..!
பாடும் உன்னை நான் பாட வைப்பேனே...."
எல்லாரும் எஸ்கேப் ஆயிடுங்க!
யோசிச்சுப் பாருங்க!
"பொறக்கும் போதே எந்த குழந்தையும் இந்த மதத்துலதான் பிறக்கணும்னு அடம் பிடிச்சு பொறக்கறதில்லை.
அதே மாதிரிதான் சாமியும். இந்த பக்கம் பார்த்தா கிருஷ்ணர் மாடு மேய்ச்சிட்டிருந்திருக்காரு. அந்த பக்கம் பார்த்தா இயேசு ஆடு மேய்ச்சிட்டிருந்திருக்காரு. இவரு என்னமோ கான்வெந்த் ஸ்கூல்ல படிச்ச மாதிரியும், அவரு என்னமோ கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிச்ச மாதிரியும் ஆளாளுக்கு சண்டை போட்டுக்கறீங்க."
டொடொடொய்ங்.....
ஜெய்கணேஷ் முகத்தை உயர்த்தறார்.
டொடொடொய்ங்.....
மலேசியா வாசுதேவன் முகத்தை உயர்த்தறார்.
சூப்பர்!