Home | About Me | E-Mail |


நாலு மணி நேரமா
அப்படி என்னதாண்டா
பேசுவீங்க?

எப்படி சொல்வது என் நண்பனிடம்?

ஒண்ணே ஒண்ணு கொடுவையும்,
மாட்டேனையும் தவிர
நாம் வேற எதுவுமே
பேசிக்கொள்ளவில்லை என்று.


இறுக்கியணைத்த உந்தன் கதகதப்போ,
காயங்கள் தந்த நகக் கீறல்களோ
'என் செல்லம்' எனும் உன் கொஞ்சலோ
சற்றும் சொல்லவில்லை.

நான் தூங்கிவிட்டதாய்
நினைத்துக்கொண்டு,
என் நெற்றிப்பொட்டில்
நீ தந்துவிட்டுப் போகும்
ஒற்றை முத்தத்தில்
தெரிந்துகொண்டேன்.
என் மீதான உன் காதலின் அளவை.



Onne onnu koden.
Matten.
Please paaa.
Mudiyaadhunna mudiyaadhudhaan.
Podi.
Podaaaaaaaaaaa.

SMS ல் கூட
ஒற்றை முத்தத்தை
தர மறுக்கும்
உன் திமிரை விடவா
அழகிய கவிதையை
எழுதிவிடப் போகிறேன்???


பி.கு. இது கவிதையா,கதையா,மொக்கையா என்ன கருமம்டா இது? என்று கேட்க நினைக்கும் நண்பர்களிற்கு. இது "காதல்" அவ்வளவுதான்.

7 Comments:

  1. Unknown said...
    // இது கவிதையா,கதையா,மொக்கையா என்ன கருமம்டா இது? என்று கேட்க நினைக்கும் நண்பர்களிற்கு. இது "காதல்" அவ்வளவுதான்.//

    காதல் தொடர வாழ்த்துக்கள் :)
    தென்றல் said...
    நந்தா,

    இந்த படங்கள் இல்லாமல் இருந்திருந்தால், உங்களின் கவிதை...கதை...மொக்கை..
    சரி "காதல்" னு வைச்சிக்கலாம் இன்னும் அழகாயிக்குமோ?!
    ஜே கே | J K said...
    அனுபவிச்சாதான் தெரியும் நந்தா!....

    எங்களுக்கு எங்க புரியப்போகுது.

    நீங்க என்சாய் பண்ணுங்கோ!....
    selventhiran said...
    எங்கப்பா புடிக்கிறீங்க இந்த மாதிரி படங்களை... நமக்கு சிக்க மாட்டேங்குதே...?
    யோசிப்பவர் said...
    "கவிதை"ங்கிற அழகான வார்த்தைக்கு பக்கத்தில் "மொக்.."ங்கிற அசிங்கமான வார்த்தையையும் சேர்த்துட்டீங்களே!!!;-(
    Anonymous said...
    நந்தா அழகான வரிகள். முத்தம் என்பது கேட்கப்படுவதும், மறுக்கப்படுவது சகஜம் தானே? ஆமாம் பின்ன தரவேண்டிய விஷயத்தை கேட்டுக்கொண்டிருந்தால் என்ன செய்ய?

    யாரோ சொல்லியிருந்தார்கள்,

    இதயத்தின் விரிதலால் வந்த உதடுகளின் குறுகல் என்று, ஆங்கிலத்தில் சொல்வதானால்

    Contraction of lips due to expansion of heart. என்று சொல்வார்கள்.

    காதல் தொடர வாழ்த்துக்கள்.
    நளாயினி said...
    அனைத்து காதல் கவிதைகளையும் ரசித்தேன்.

Post a Comment