"புருஷனை கைக்குள்ள போட்டுக்கோடி,
அப்போதான் காலம் தள்ளமுடியும்!"
அக்காவிற்குச் சொன்ன
அதே அம்மாதான்
என்னிடம் சொன்னாள்.
"உன் பொண்டாட்டி,
தலையணை மந்திரம் ஓதுவா.
அவ முந்தானைல சிக்கிக்காத
நீ ஆம்பளைடா!"
அடிச்சு சொல்லுவேன்.
எல்லா அம்மாக்களும்
'ஹமாம்' அம்மா கிடையாதுன்னு.
Labels: கவிதை
7 Comments:
Subscribe to:
Post Comments (Atom)
ஆண் என்பவன் தாய்க்கும் தாரத்துக்கும் இடையே மாட்டி சாண்ட்விச் ஆகிறவன்!
ஆண் என்பவன் தன் தாய், தாரம், சகோதரிக்கு இடையில் கொத்துபரோட்டா ஆகிறவன்!
ஆண் பித்தளை என்பவன் தன் அனுமதியிலாமலே பேரிச்சம்பழத்துக்கு எடைக்கு எடை எக்ஸ்சேஞ்ச் ஆகிறவன்!
இப்ப ஒரு பதிவு படிச்சு உடனே இதையும் படிச்ச விளைவு..
நல்லாருக்குங்க கவித..
சென்ஷி
(பி.கு: இது ஒரு உள்குத்து பின்னூட்டம். இங்கு பிரசுரம் ஆகும் என்பதால் வெளியிடுகிறேன் :))
//பரஸ்பர அன்பு பரிமாற்றம் என்பது மட்டுமே இருக்க வேண்டியது போய் பெண் என்பவள் சாகசங்களின் மூலமே அந்த உறவுகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் அவலத்தை//
சொல்ல வந்ததை ரொம்ப சரியா புரிஞ்சு இருக்கீங்க லட்சுமி.
வாங்க சென்ஷி. உங்க உள்குத்தை இங்கயும் ஆரம்பிச்சுட்டீங்களா? அப்படி என்ன பதிவுங்க அது நினைச்சு நினைச்சு சிரிக்கற அளவுக்கு. சொன்னா நாங்களும் சிரிப்போம்ல.
வருகைக்கு நன்றி சூர்யா & சுந்தர்.