Home | About Me | E-Mail |

விடி விளக்கின்
வெளிச்சத்தில் கூட
தலையை தாழ்த்தியோ,
இறுகிய கைகளுடனோ,
மட்டுமே இருந்திருக்கிறாய்.

இன்றாவது நீ தொடங்குவாய் என
காத்திருந்து காத்திருந்து
எல்லா நாளிலுமே நானே
தொடங்கியிருக்கின்றேன்.

ஆடைகளைக் களையும் போதும்,
அங்கங்களை வருடும் போதும்,
காமுகன் என நினைத்திடுவாயோ
என்று பயந்தே செய்கின்றேன்.

'ம்' என்ற ஒற்றைச் சொல்லிலேயே
எனக்கான
எல்லா அர்த்தங்களையும்
தேடித் தேடிக் களைத்துப் போகின்றேன்.

உன் வசமிழக்கும் வரை
விருப்பமில்லாதது போல் நடிப்பதாலேயே
பல முறை கற்பழிக்கிறேனோ என்று
பயந்திருக்கின்றேன்.

கணவனிடம் கூட
காமம் காட்ட
மறுப்பதற்கு பதில்
நீ கன்னியாகவே இருந்திருக்கலாம்.

ஒன்று மட்டும் சொல்கிறேன் கேள்.
ஆசைகளும், அவஸ்தைகளும்
பெண்களுக்கு மட்டுமே
சொந்தமில்லை.

13 Comments:

  1. said...
    காமத்தில் வெட்கமில்லை. யாருக்கும் எதற்கும் உரிமையுண்டு. ஆகையால்....காமத்தில் சைவம் என்பது வேலைக்குதவாது என்பது என் கருத்து. அதைத்தான் கவிதையும் சொல்கிறது.
    Anonymous said...
    ராகவன் சார் சொன்னதைதான் நானும் சொல்ல வந்தேன் :)
    Anonymous said...
    //உன் வசமிழக்கும் வரை
    விருப்பமில்லாதது போல் நடிப்பதாலேயே
    பல முறை கற்பழிக்கிறேனோ என்று
    பயந்திருக்கின்றேன்.//

    பலர் பயப்படுவது இல்லை :)
    கோவித்துக் கொள்ள வேண்டாம்.சில நாட்களுக்கு முன் நான் படித்த செய்தி ஞாபகம் வந்தது :)
    said...
    அடடா நந்தா,

    நல்ல கவிதை.. அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்..

    ஜிரா சொன்னது சரியே.. மருத்துவ ஆலோசகர்கள் கூட அதையே முன்மொழிகின்றனர்.. வெட்கமோ, கூச்சமோ படாதீர்கள்.. வேண்டியதை வாங்கிச் சாப்பிடுகிற மாதிரி, வேண்டியதைக் கேட்டுப் பெறுங்கள் என்று.

    நான் ஆரம்பத்தில் இது ஒரு விலைமாதுவிடம் பேசுவதாக எழுதப்பட்டதாயிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் மனைவியைப் பற்றி எழுதியிருக்கிறீர்..

    இதற்கு மாற்றுக்கருத்தாக, முன்பு ஒருமுறை ராஜேஷ்குமாரின் நாவலில் படித்த கவிதை நினைவுக்கு வருகிறது.. (கவிதைப் பகுதியில் யாரோ எழுதியது.. பெயர் நினைவில்லை.. பல வருடங்களுக்கு முன் என்பதால்)..


    "எத்தனை நாட்கள் அடைந்திருப்பாய்
    உனக்கான தீயின் நீளத்தை
    என் தேவை முடிந்ததுமே நீ
    தேவையில்லாதவளாகி விடுகிறாய் பல நேரங்களில் " என்று..
    said...
    மறந்துட்டேன்...

    //உன் வசமிழக்கும் வரை
    விருப்பமில்லாதது போல் நடிப்பதாலேயே
    பல முறை கற்பழிக்கிறேனோ என்று
    பயந்திருக்கின்றேன்.//

    நல்ல உணர்வின் வெளிப்பாடு...
    said...
    //கணவனிடம் கூட
    காமம் காட்ட
    மறுப்பதற்கு பதில்
    நீ கன்னியாகவே இருந்திருக்கலாம்.//

    நச்!

    ஆனால், இந்தக் கவிதையும் இன்னும் பல கவிதைகளும் ஆணில் பார்வையிலேயே இருக்கிறது. கொஞ்சம் பக்கத்து வீட்டு ஆணுடன் பேசினாலே சந்தேகப்படும் அல்லது கட்டுப்படுத்தும் ஆண்கள் இருக்கும் சமூகத்தில் படுக்கை அறையில் சுயம் காட்டும் பெண்ணை காமுகி என்ற எத்தனை ஆண்கள் நினைக்க மாட்டார்கள்? உள்ள பிரச்சினையில் இது வேறா என்று கூட பெண்கள் சும்மா இருக்கலாம் அல்லவா?

    பத்தினிப் பெண்கள் கவிதையும் இதே ஆணின் பார்வை தான். கொஞ்சம் அதிர்ந்து சிரித்தால்கூட அடங்காப்பிடாரி, wrongகாரி என்று பட்டம் கட்டப்படும் ஊரில் சுயம் காட்டுவது எளிதில்லை. பெண்ணுரிமைக்குப் போராடுவதைக் காட்டிலும் பிரச்சினை இன்றி வாழ்ந்து விட்டுப் போவது தான் எதார்த்தம்
    said...
    //ஆனால், இந்தக் கவிதையும் இன்னும் பல கவிதைகளும் ஆணில் பார்வையிலேயே இருக்கிறது. கொஞ்சம் பக்கத்து வீட்டு ஆணுடன் பேசினாலே சந்தேகப்படும் அல்லது கட்டுப்படுத்தும் ஆண்கள் இருக்கும் சமூகத்தில் படுக்கை அறையில் சுயம் காட்டும் பெண்ணை காமுகி என்ற எத்தனை ஆண்கள் நினைக்க மாட்டார்கள்? உள்ள பிரச்சினையில் இது வேறா என்று கூட பெண்கள் சும்மா இருக்கலாம் அல்லவா?

    பத்தினிப் பெண்கள் கவிதையும் இதே ஆணின் பார்வை தான். கொஞ்சம் அதிர்ந்து சிரித்தால்கூட அடங்காப்பிடாரி, wrongகாரி என்று பட்டம் கட்டப்படும் ஊரில் சுயம் காட்டுவது எளிதில்லை. பெண்ணுரிமைக்குப் போராடுவதைக் காட்டிலும் பிரச்சினை இன்றி வாழ்ந்து விட்டுப் போவது தான் எதார்த்தம் //

    வாங்க ரவி,

    நீங்க சொன்னது கரெக்ட் தான். நான் அதை ஒரு ஆணோடஎதிர் பார்ப்புகளாகத்தான் சொல்லி இருக்கேன். ஆண்கள் மாறிக்கொண்டு வருகிறார்கள் என்று ஒரு ஆண் சொன்னால்தான் சரியாக இருக்கும் எண்பதால் அந்த கண்ணோட்டத்தில் எழுதியுள்ளேன்.
    said...
    Innum intha kavithayin pathipil erunthu velaya vara muduyavillai...
    said...
    நன்றி வசந்த்
    said...
    வித்தியாசமா... நல்லாருக்கு நந்தா
    said...
    உண்மை மட்டும் சொல்லும் கவிதிகள் சிலவற்றுள் சிறந்த ஒன்று .. வாழ்த்துக்கள் :)
    said...
    m..

    nallaayirunthathu:)
    said...
    m..

    nallaayirunthathu:)

Post a Comment